மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர். தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அஜித்துடன் கடந்த பொங்கலன்று வெளியான துணிவு படத்திலும் நடித்திருந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்துடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் பைக்கர்ஸ் குழுவுடன் ‘அட்வென்ச்சர் ட்ரிப்’ சென்றஅஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியரும் சுற்றுப் பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அஜித்குமாருடன் லடாக் பகுதியில் பைக் பயணம் செய்த புகைப்படங்களை மஞ்சுவாரியர் வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.கடந்த மாதம் பைக் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமத்தை பெற,,எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரி முன்னிலையில் பைக் ஓட்டி காண்பித்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றார்.
இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த ‘பி எம்டபிள்யு’ பைக் வாங்கியுள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில்,‘தைரியத்தின் ஒரு சிறிய படி எப்போதும் தொடங்குவதற்கு ஒரு நல்ல இடம்.
நான் ஒரு நல்ல ரைடராக மாறுவதற்கு முன்பு ஒரு வழி செல்ல வேண்டும், அதனால் நான் சாலைகளில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால், தயவுசெய்து என்னுடன் பொறுமையாக இருங்கள்
என்னை போன்ற பலருக்கு உத்வேகமாக இருந்ததற்கு நன்றி #AK #AjithKumar சார்’’என்றும் பதிவிட்டுள்ளார்.இந்த பிஎம் டபிள்யு ஆர்.1250 ஜி எஸ் மாடல் பைக், 1254 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது