பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (வயது 58) திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்..நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திடீர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது கடந்த டிசம்பர் மாதமே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மயிலசாமி தீவிர சிவ பக்தர், இவர் ஒவ்வொரு கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கு சென்று சிவனை வழிபடுவதும் வழக்கம், தீவிர சிவ பக்தரான இவர் நேற்று சிவராத்திரி தினத்தில் சிவனடி சேர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் பிறந்தவர். 1984-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இவர் கமல் மற்றும் ரஜினியுடன் நடித்துள்ளார். இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
சென்னையில் உள்ள சாலிகிராமத்தில், வசித்து வந்த இவர் இன்று அதிகாலை 03.30 நெஞ்சுவலியின் காரணமாக சுயநினைவின்றி இருந்த நிலையில அவரைஅருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அக்டோபர் 2ந் தே 1965ம் ஆண்டு பிறந்தார். மிமிக்கிரி கலைஞகரான இவர் பல நிகழ்ச்சியில் மிமிக்கிரி செய்து அசத்தினார். 1984ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் உருவான தாவணிக்கனவுகள் படத்தில் பல கனவுகளுடன் கூட்டத்தில் ஒருவராக நுழைந்தார்.
நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பாய் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார்.
இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆரிய பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் நடித்திருந்தார்.