துணிவு படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அப்படத்திலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு விட்டார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
இந்நிலையில்,இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்றும், ஆக்ஷன் கதையாக உருவாகவுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார் விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படும் நிலையில்,
சில சமூக வலைத்தளங்களில்,’மகிழ் திருமேனி படத்துக்கு பிறகு முழுமையாக இரண்டு வருடங்கள் சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்க அஜித் திட்டமிட்ட்டுள்ளதாகவும் அந்த இரண்டு வருட இடைவெளியை நிரப்புகிற அளவுக்கு ‘ஏ.கே.62’ படம் இருக்க வேண்டுமென அஜித் விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.