தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 26-ந்தேதி நடக்க உள்ளது .
இந்த தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற 2 நீதிபதிகளை தேர்தல் அதிகாரிகளாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறப்பட்டுள்ளதாவது
“உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் செந்தில்குமார் ராமமூர்த்தி இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தலைவர், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் , இணைச்செயலாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.
அடுத்த மாதம் 26-ந்தேதி (26.3.2023) நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட இந்த மாதம் 23-ந்தேதி முதல் 26ந்தேதி வரை (23.2.2023 to 26.2.2023) ஏற்கனவே அறிவித்துள்ளபடி வேட்புமனுக்கள் சங்க அலுவலகத்தில் அதற்கான பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
27.2.2023 காலை 11.00 மணி முதல் 2.3.2023 மாலை 4.00 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.2.3.23 வேட்புமனு பரிசீலனையும், 3.3.2023 முதல் 5.3.2023 வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.
5.3.2023 வெளிடப்படும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 6.3.2023 அன்று வாக்களிக்க உரிமையுள்ளஉறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.26.3.2023 வாக்குப் பதிவும், அன்று மாலை 5.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.