‘ஆர் ஆர் ஆ’ர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ நாட்டுக்கூத்து பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் பிரிவில் இடம்பிடித்துள்ள நிலையில், வரும் மார்ச் 13ம் தேதி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு ஆரம்பமாக உள்ள ஆஸ்கர் விழாவுக்காக,ராஜமெளலி. தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில்,’பாகுபலி’,’ஆர் ஆர் ஆர்’ படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி அடுத்தாக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தை இயக்கவுள்ளார் இந்திய திரையுலகையே எதிரப்பரப்பில் ஆழ்த்தியுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை
ஆஸ்கர் விழா முடிந்ததும், வரும் மார்ச் இறுதியில்,தனது தந்தை விஜயேந்திர பிரசாத் உருவாக்கி உள்ள கதைக்கான திரைக்கதை வேலையை 9 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கஉள்ளாராம் ராஜமவுலி இந்த இந்த ஆண்டு இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தையும் பக்காவாக முடித்து விட்டு அடுத்த ஆண்டு சங்கராந்தியில் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக ராஜமவுலி வட்டாரம் தெரிவிக்கிறது. முதல் கட்டமாக ரூ. 500 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆப்பிரிக்கா காடுகளில் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் ஹாலிவுட்டைச் சில நடிகர், நடிகைகளையும் நடிக்க வைக்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையும் தற்போது ராஜமவுலி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.