தனுஷ்,ஐஸ்வரியா இருவரும் தங்களது பிரிவு அறிவிப்புக்கு பின்னர் தங்களது பணியில் தீவிர கவனத்தை திருப்பியிருந்தாலும்,இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது மகன்களான லிங்கா, யாத்ரா என இருவருடனும் அதிக நேரம் செலவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சமீபத்தில் தனது ‘வாத்தி’ பட நிகழ்ச்சியில் கூட தனுஷ் தனது இரண்டு வாரிசுகளையும் அழைத்து வந்திருந்தார். இந்நிலையில்,ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டு மகன்களும் படிக்கும் பள்ளிக்கு சென்று அவர்களது ஸ்போர்ட்ஸ் டே விழாவில் கலந்து கொண்டுள்ளார். பள்ளி விளையாட்டு போட்டிகளில் மகன்கள் பதக்கம் வென்றதை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வெயில் வாட்டி வதைத்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடும் பிள்ளைகளின் ஆர்வத்தை நிறுத்த முடியாது. லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் வெயிலில் குளிப்பதையும் ஒளிர்வதையும் பார்க்க முடிந்தது’ என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.