
அப்போது அவர் கூறியதாவது “ஒரு குழந்தை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டால் அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் ஆணா பெண்ணா என்பதில் பிரச்சினை இல்லை என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது மனைவியை அடிப்பதும் குழந்தைகளை அடிப்பதும் தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் தான் தனது பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தார்
எனக்கு 8 வயதாகும் போது பாலியல் துன்புறுத்தல்களை செய்யத் தொடங்கினார்எனக்கு 15 வயதாகும் போது அவருக்கு எதிராகத் துணிச்சலாக பேசத் தொடங்கினேன் எனக்கான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் எனக்கு வந்தது எங்கு நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தப்படுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்தது.
இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன்நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சமும் எனக்கு இருந்தது ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார் .

தமிழ் திரையுலகில் தர்மத்தின் தலைவன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த குஷ்பூ,ரஜினி, கமல் என 80களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் மும்பையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை குஷ்பூ தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறையாக கற்றுகொண்டவர். .

கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த நடிகை குஷ்பூ தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு திமுகவி இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பூ அங்கிருந்தும் விலகினார் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்
2021ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பூ திமுக வேட்பாளர் என்எழிலனிடம் தோல்வியை தழுவினார் தொடர்ந்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்
கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருடன் சேர்த்து மம்தா குமாரி டெலினா கோங்தூப் ஆகியோரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர் இந்நிலையில் தன் வாழ்நாள் பிரச்சினைககள் குறித்த நடிகை குஷ்பூவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது