இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை போலவே இசை மீது மிகுந்த ஆர்வம் காட்டி வரும் அவரது மகன் ஏஆர் அமீன், ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற, ‘மௌலா வா சல்லிம’ எனும் பாடலை பாடி உள்ளார். சச்சின், 2.O , தில் பேச்சாரா உள்ளிட்ட பல படங்களிலும் பாடியிருக்கிறார். மேலும் தனியாக சுயாதீன இசை ஆல்பங்களை உருவாக்கி அதில் பாடியும்,நடித்தும் வருகிறார். வருகிறார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஒரு மியூசிக் வீடியோவிற்கான படப்பிடிப்பில் ஏ.ஆர்.அமீன் கலந்துகொண்டிருக்கிறார். ராட்சத கிரேன் உதவியுடன் மின் விளக்குகளை தாங்கியபடி பிரம்மாண்ட கம்பி ஒன்று தொங்கவிடப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடந்த போது எதிர்பாரா விதமாக .கிரேனின் உதவியுடன் அந்தரத்தில் தொடங்கிக் கொண்டிருந்த கம்பி திடீரென மேடையின் மீது அறுந்து விழுந்துள்ளது. அப்போது கீழே நடனம் ஆடிக் கொண்டிருந்த ஏ.ஆர்.அமீன் மற்றும் குழுவினர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பி உள்ளனர்.
இந்த நிகழ்வின் போது எடுத்த புகைப்படத்தை, ஏஆர் அமீன் தனது இன்ஸ்டாகிராமில், மிகப்பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினேன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இன்று நான் பாதுகாப்பாகவும், உயிருடன் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனது பெற்றோருக்கும் , குடும்பத்தினருக்கும், எனது நலம் விரும்பிகளுக்கும், எனது ஆன்மீக குருமார்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு 3 மணி அளவில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது, அதில், கேமரா முன் மும்மரமாக பாடிக்கொண்டு இருந்தேன். அப்போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரஸ் மற்றும் சரவிளக்குகள் திடீரென்று கீழே சரிந்தன. நல்ல வேளையாக நடுவில் நான் நின்று கொண்டிருந்தேன்.
இன்னும் சில அங்குலங்கள் முன்னரோ, பின்னரோ நின்றிருந்தாலோ, அங்குமோ, இங்குமோ நகர்ந்து இருந்தாலோ மொத்தமும் தலையில் விழுந்திருக்கும். என்னாலும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.