என்னதான் மறைத்தாலும் ஒருநாள் அது விதை முளைப்பதைப் போல் வெளிவந்தேயாக வேண்டும் ,அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்பார்கள்.அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேட்டரில் நடந்திருக்கிறது.
தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர். ஒருவேளை பாஜகவை சேர்ந்த வெங்கையாநாயுடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் அந்த முக்கிய உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் நினைத்திருக்கலாம்.
அரசியலுக்கு வருவதாக அடித்துப் பேசிய ரஜினி பின்னர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று பேசி அன்றைய பிஜேபி தலைவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தார், அன்றைய காலகட்டத்தில் பிஜேபி தலைமை தமிழகத்தில் காலூன்ற நினைத்திருந்தது.முக்கியமான நேரம். ஆனால் தன்னுடைய உண்மையான உடல் நலம் பற்றிய கவலையில் டாக்டர் சொன்ன அறிவுரையினால் மனம் மாறி இருந்தார்.
” எனக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதால் அதற்காக தீவிரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தேன்.
அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரானாவின் இரண்டாவது அலை வந்தது. இதையடுத்து கொரானாவின் பரவல் படிப் படியாக அதிகரித்து வந்தது. அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்ட நிலையில் அந்த முடிவிலிருந்து பின் வாங்க முடியாது.
அதனால் மருத்துவரின் உடல் நிலை குறித்து கேட்டேன் 60 சதவீத கிட்னி பாதிப்பு. அமெரிக்க சென்று மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ள வேண்டும் . அதனால் நீங்கள் பொதுமக்களை சந்திப்பதோ, பிரசாரத்திற்கு செல்வதோ கூடாது என எச்சரித்தார்.
இதை மீறி சென்றால் 10 அடி தூரம் தள்ளி நிற்கவேண்டும், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மக்களை பார்க்கும் போது எப்படி தள்ளி நிற்பது ? அந்த நேரத்தில் கொரானா உச்சத்தில் இருந்த நேரம். இதை வெளியே சொன்னால் அரசியலை கண்டு ரஜினி பயந்துவிட்டார் என்று கூறுவார்கள். யாரிடம் சொல்லவேண்டுமோ, நானே சொல்கிறேன் என்று என் மருத்துவர் கூறினார். அதன்பிறகு தான் நன்கு யோசித்து அரசியலுக்கு வரவில்லை என்று கூறினேன் என்பதாக சூப்பர்ஸ்டார் ரஜினி தெரிவித்தார்.