சும்மா சொல்லக்கூடாது லெஜண்ட் சரவணனை! கோடம்பாக்கத்தை ஒரு கலக்கு கலக்கிட்டார் என்பதை ஒத்துக் கொண்டேயாக வேண்டும்.
சிலர் மெய்யாலுமே கலங்கித்தான் போனார்கள்.இவரிடம் வேலை பார்த்தவர்கள் சுருட்டலில் ஈடுபட்டு எஜமான விசுவாசத்தை காட்டுவதற்கு அண்ணாச்சியின் கோடம்பாக்க யாத்திரை பயன்பட்டது.
நிர்வகித்தவர் முக்கியமான புள்ளிகளின் முகத்திரையை கிழித்தார் .அவர்களுக்கெல்லாம் தற்போது இங்கு வேலை இல்லை.
த லெஜண்ட் படத்தில் இருந்த முக்கிய புள்ளிகள் புதிய படத்தில் இல்லை.
அதிவிரைவில் அண்ணாச்சியின் அனகோண்டா புராஜெக்ட் வெளியாகப்போகிறது.லெஜண்ட் சரவணனின் புதிய தோற்றத்தில் புயலாக வரப்போகிறது புதிய அனவுன்ஸ்மென்ட் !!