நடிகர் சங்க கட்டிடப்பணிகள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?
ரசிகனின் மனதில் அடிக்கடி எழும் கேள்வி ?இல்லை சந்தேகம்.!
எஸ் !அந்த சந்தேகம் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் வரும் அல்லவா?
அப்படி வரும்போதெல்லாம் சங்கத்தைச் சுற்றிப்பார்த்து விட்டு பத்திரிகைகளுக்கும் செய்தியைத் தட்டி விட்டுப்போவார்கள்.
பாவம் அவர்களை சொல்லி என்ன பயன்?சங்கத்தில் தான்
கட்டிடம் எழக்கூடாது என்கிற ‘நல்ல எண்ணத்தின்’வேந்தர்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறபோது என்ன செய்ய முடியும்?
அண்மையில் சங்கத் தலைவர் எம்.நாசர்,பொருளாளர் கார்த்தி,துணைத் தலைவர் பூச்சி முருகன்,ஈ சி மெம்பர்ஸ் லதா,மனோபாலா , கோவை சரளா இன்னும் சிலர் கட்டிட வேலைகள் நடக்கக்கூடிய இடத்துக்கு சென்று பார்த்தனர்.
சங்க கட்டிடத்தில்தான் கல்யாணம் நடக்கும் என்கிற சபதம் ஏற்றிருந்த விஷாலுக்கு கல்யாணம் நடக்குமா?
அட போங்க சார். அவருக்கு பிரம்மச்சரியத்தில்தான் பல வசதிகள் இருக்கிறதாம்.