ஜெயம் ரவி .திறமைசாலி. பெரிய இடைவெளி இவருடைய நல்ல படங்களை பார்த்து.!
காதலில் மேன்மை,மென்மை ,எளிமை,வலிமை ,தயக்கம் ,மயக்கம் இப்படி எல்லா வகையிலும் காதலித்து அந்த கேரக்டருக்கு நியாயம் செய்கிறவர் ,என்னாச்சு இவருக்கு?
என கேட்கமுடியாமல் இருக்க முடியவில்லை.
இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் நாயகனை வேறு முகத்தில் காட்ட முயன்று இருக்கிறார்.
மறைந்த இயக்குநர் தங்கம் ஜனநாதன் இல்லாத குறை தெரிகிறது.
ஹார்பர் கில்லாடி ஆக்கி ஜெயம்ரவியை சிதைத்து விட்டார் என்றே சொல்லலாம். ஆனாலும் முக்கால் வாசி வில்லனாகிவிட்டவரை ரசிக்க முடிந்தது. அது ரவியின் திறமை. ஹார்பரில் சக்கரவர்த்தி ஹரிஸ் பெராடி .இவருக்கு எல்லாமே ஜெயம் ரவிதான். எதிர்க்க எவருமே இல்லை என்கிற பெராடிக்கு ரவியே வில்லனாகினார் .அருமையாக சொல்லியிருக்கலாம்.ஆனால் திரைக்கதையில் இருந்த குழப்பத்தினால் தொடக்கத்தில் நமக்கு இருந்த ஆர்வம் போகப் போக நமத்துப் போகிறது.
இதனால் பிற்பகுதியில் நமக்கு அலுப்பு.!ஆனால் இன்னொரு ஜெயம் ரவி வந்து ஆச்சரியப்படுத்துகிறார்.ஆறுதல்.
சமுதாய அக்கறையுடன் அகில உலக அரசியல் பேசுவதில் ரவிக்கு உதவியாக இருந்தவர் இயக்குநர் ஜனநாதன் ,அவரை காலம் கொள்ளை கொண்டு போய்விட்டது.!
பிரியாபவானிசங்கருக்குக் காவல்துறை அதிகாரி வேடம். காக்கிச்சட்டை பொருந்தவில்லை. ஒரு டெரர் இருக்க வேணாமோ? மற்றும் தன்யா ரவிச்சந்திரன்,ஹரிஸ் பெராடி ,மதுசூதன் ராவ்,ஜிரக் ஜானி அவரவர் கேரக்டர்களை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.
பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர்.விவேக் ஆனந்த் .
செவிகளை பங்கப்படுத்தியவர் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.
கத்திரிகளுக்குக் கூர்மை போதவில்லை என்.கணேஷ்குமார்.
—தேவி மணி