வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம்.அது கொடுமையாகவும் இருக்கலாம் ,குதூகலமாகவும் இருக்கலாம்.
பாகுபலி நடிகர் ராணா டகுபதிக்கு நடந்தது இரண்டுமே!
மகிழ்ச்சியை கொடுத்த இயற்கை கூடவே மரண பயத்தையும் கொடுத்தது.
பார்வையில் கோளாறு. கிட்னியில் தகராறு.ஆனாலும் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்.ஆந்திரத்து சினிமாவில் இவரது குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறது.
வலது கண்ணில் கார்னியல் பிரச்னை.பி.பி .சிக்கல்.கிட்னி பழுது .ஒரு மனிதன் இந்த அளவுக்கு பாதிக்கப்படலாமா ? இதயத்திலும் கோளாறு. ஜஸ்ட் லைக் எ டெர்மினேட்டர் !!ஆனால் நான் மனம் தரளவில்லை. தைரியமாக அணுகினேன்.
கார்னியல் ட்ரான்ஸ்பிளான்ட் ,கிட்னி ட்ரான்ஸ் பிளான்ட்! சக்ஸஸ்.இவைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .கவலைகள் இருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.மகிழ்ச்சிகரமான வாழ்க்கை”என்கிறார் ராணா டகுபதி.
ஒரு காலத்திய த்ரிஷாவின் காதலர்.!