ஆளுங்கட்சியில் சற்று செல்வாக்கு இருக்கிறது தயாரிப்பாளர் ஒய் நாட் சசிகாந்துக்கு.!
இவர் முன்னாள் சட்டசபை திமுக உறுப்பினர் சிவாஜியின் மகன். எந்த நிலையிலும் தனது அரசியல் செல்வாக்கினை சசிகாந்த் காட்டியதில்லை.
தமிழ்ப்படம் , இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உள்ளிட்ட அதிக அளவில் இந்த நிறுவனம் படங்களை தயாரித்து இருக்கிறது.
சசிகாந்த் இயக்குநராக களமிறங்கி மாதவன் ,சித்தார்த் ஆகியோரை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார்.இந்த படத்தின் நாயகி நயன்தாரா.
ஜனவரியில் தொடங்க விருந்த படப்பிடிப்பு நயன்தாரா வராததினால் தொடங்காமல் போனது. காரணம் அட்லி. இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கி வந்த ஜவான் படத்துக்கு சென்று விட்டார் நயன்.!
இவரது கால்ஷீட் சொதப்பலால் மற்ற நடிகர்களுடைய கால்ஷீட்டும் வீணாகிப்போனது. பெரிய நடிகை என்பதால் அவரது சொதப்பலை சகித்துக்கொள்ள வேண்டிய பரிதாப நிலை.
படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள்.
என்ன செய்வது முள்ளில் விழுந்தது சேலையென்ன ,வேட்டி என்ன ,எல்லாமே ஒண்ணுதான்யா!