காவல் நிலையத்தில் இருக்கிற குற்றவாளி நிஷாந்த் ரூசோவை வழி காட்டச்சொல்லி காட்டுக்குள் அழைத்துச்செல்கிறது காவல் துறை.! அவருக்குத்தான் வழி தெரியும் என்பதால்.!
காட்டுக்குள் பிரசன்னா உயிரில்லாமல் கிடக்கிறார். அவரது கையுடன் நிஷாந்தின் கையையும் விலங்கு போட்டு பிணைக்கிறார்கள். இன்ஸ்பெக்டராக கோடாங்கி வடிவேல் .பிரசன்னாவுக்கு உயிர் இருக்கிறது என்பது
அந்த இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவதற்காக நாயகனையும் இழுத்துச் செல்கிறது காவல்துறை. அங்கே சென்று பிணமாகக் கிடக்கும் விவேக்பிரசன்னாவைக் கண்டறிகிறார்கள்.அவருடன் நாயகனின் கையைச் சேர்த்து கைவிலங்கு போடுகிறார் காவலதிகாரியாக வரும் கோடங்கிவடிவேல்.
கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயல்கையில் விவேக்பிரசன்னாவுக்கு உயிர் இருப்பதை அறிந்துகொள்கிறார். அப்போது,விவேக்பிரசன்னாவின் கைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது.பிரசன்னாவை காப்பாற்றும்படி கைபேசியில் பேசிய பெண் கெஞ்சுகிறாள்.
கொலை செய்ய முயலும் ஒரு கும்பலிடமிருந்து பிரசன்னாவை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படம். பெரும்பாலும் காட்டுக்குள்ளேயே சம்பவங்கள் நடப்பது இந்த திரில்லர் படத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
நிஷாந்த்ரூசோ, விவேக்பிரசன்னா, காயத்ரி, காவல்துறையினராக வரும் ராட்சசன் வினோத், கோடங்கிவடிவேல் வில்லன்களாக வரும் கெளதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் உள்ளிட்ட அனைவருமே இது பரபரப்பான த்ரில்லர் படம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
அஸ்வின் நோயலின் கேமரா கதையுடன் காட்டுக்குள் பயணித்து விறுவிறுப்பு கூட்டுகிறது.
இயக்குநர் கோ.தனபாலன் வஞ்சகம் சூழ்ச்சி வீழ்ச்சி அடையும் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார். நல்ல முயற்சி .!