மிகவும் கொதித்துத்தான் போயிருந்தார் வரலட்சுமி சரத்குமார்.
ஒரு நடிகரிடமோ,நடிகையிடமோ பத்திரிகையாளர்கள் பேசுகிறபோது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேட்பது சாதாரணமாக பழக்கத்தில் இருப்பதுதான்.
அதுதான் வரலட்சுமிக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐஸ்வர்யா -தனுஷ் பிரிவு பற்றி வரலட்சுமியிடம் கேட்டது தவறுதான்.
“அது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. நான் அதை வரவேற்கிறேன். அவர்களுக்கு பிரிந்து வாழ்வது மகிழ்ச்சி என்றால் அது நல்லதுதானே!
அதில் கருத்து சொல்வதற்கு நாம் யார்? ஒரு ஸ்டாரிடம் பேசும்போது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேட்காதீர்கள்.நீங்கள் யார் ?”என்று காட்டமுடன் கேட்டார் வரு.!