மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சிம்பு தனது 48வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் நடிக்கவுள்ளார்.சிம்பு நடிக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.
அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்தில், சிம்புவுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.சிம்புவின் 48 வது படமாக உருவாகும் இப் படத்தின் கதை முதலில் ரஜினிக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
இந்நிலையில், சிம்பு தாய்லாந்து சென்று,, மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டதோடு முன்னிலும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். சிம்புவை சமீபத்தில் பார்த்த உலகநாயகன் சிம்புவை பார்த்து வியந்ததோடு, உடனடியாக படப்பிடிப்பை தொடங்குமாறு இயக்குனரிடம் கூறிவிட்டாராம்.
இதையடுத்து அடுத்த சில நாட்களில் சிம்புவின் 48 படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளதாம். மொத்த படப்பிடிப்பையும் இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில்,நடிகர் சிம்பு இன்று சென்னையில் அவரது வீட்டில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு சுடச்சுட பிரியாணி விருந்தும் தன் கைகளாலேயே பரிமாறியிருக்கிறார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டுள்ளார்.