சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நலம்தானா பாடலுக்கு கவர்ச்சி உடையில் ‘கெட்ட ‘ஆட்டம் போட்டநடிகை சனா கான், முப்தி அனஸ் சையத் எனும் தொழிலதிபரை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்ட சனா கான் தனது கணவர் பிசினஸை கவனித்து வருகிறார் என்கிறார்கள்.
இந்நிலையில்,சமீபத்தில் மும்பையில் நடந்த இப்தார் விருந்து ஒன்றில் தனது கணவருடன் சனா கான் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அந்த இடத்தில் இருந்து தனது மனைவியை தரதரவென சனா கானின் கணவர் இழுத்துச் செல்லும் வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது
இவ்வீடியோவை பார்த்த .நெட்டிசன்கள் பலரும், கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை இப்படியா தரதரவென இழுத்துச் செல்வது என சனா கானின் கணவரை திட்டி, பதிவிட்டு வந்தனர்.
இதைப்பார்த்த நடிகை சனாகான், நிகழ்ச்சியில் அதிக வெப்பம் காரணமாக எனக்கு வியர்த்துக் கொட்டிய நிலையில், கார் டிரைவரையும் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாததால் தான் என்னை அங்கிருந்து அவசரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றார் என விளக்கம் அளித்துள்ளார்