அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரில் வரும் ஜூலை ஏழாம் ஜூன் 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் 22 ஆவது டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் உலகளாவிய பிரத்தியேக காட்சி திரையிடப்படுகிறது.
இது குறித்து நடிகர் பிரபாஸ் கூறுகையில், ” நியூயார்க்கில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஆதி புருஷின் உலகளாவிய பிரத்யேக காட்சியை காண்பதில் பெருமிதம் அடைகிறேன்.
நமது தேசத்தின் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் திட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். நமது இந்திய திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.என்னை பொருத்தவரை ஆதி புருஷ் சர்வதேச அளவிலான அரங்குகளை சென்றடைந்ததை …ஒரு நடிகனாக மட்டுமின்றி, ஒரு இந்தியனாகவும் என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. டிரிபெகாவில் ஆதிபுருஷ் படத்துக்கான வரவேற்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்கிறார்.
‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் பிரபாஸ் கிருத்தி சனோன் ஸன்னி சிங் சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை டி சிரீஸ் பூசன் குமார் மற்றும் கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரித்துள்ளனர்