தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்
காஷ்மீரைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்துவருகிறது. இந்நிலையில் லியோ படத்துக்கு அடுத்ததாக விஜய்யின் 68 வது படத்தை இயக்குனர் அட்லீ இயங்குவார் என்றும் ஜவான் படப்பிடிப்பு முடிவடைந்ததும் உடனடியாக அட்லீ விஜய் 68 படத்தை தொடங்குவார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான தெறி , மெர்சல்,பிகில் ஆகிய படங்கள் மெகா ஹிட்டானதால் இக் கூட்டணி மீண்டும் இணைவது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில்,விஜய் மீண்டும் தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம் அதாவது சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் மல்னேனி விஜய்யிடம் ஒரு கதையை கூறியிருந்ததாகவும் அது விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனதால் அடுத்ததாக அவரது இயக்கத்திலேயே விஜய் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் வெளியான வாரிசு அவரது ரசிகர்களுக்கு திருப்தியை அளிக்காத நிலையில், மீண்டும் தெலுங்கு இயக்குகருடன் விஜய் இனிய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில்,சோர்வை ஏற்படுத்தியுள்ளது