தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்
இந்நிலையில், யோகா மீது மிகவும் ஆர்வம் காட்டி வரும் ரம்யா பாண்டியன் தற்போது நாற்காலி ஒன்றில் தலைகீழாக நின்று யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ குறித்து ரம்யா பாண்டியன் கூறுகையில், “ஒரு வருடம் முன்பு நான் இப்போது செய்வதில் பாதியைச் செய்திருக்க முடியாது.
நாற்காலி யோகாவில் நான் எனது கை வலிமை, சமநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்.
எனது கடினமான கீழ் முதுகு 50சதவீதம் வளைகிறது. இந்த யோகாவில் நான் சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கொண்டாடுகிறேன்.
நான் யோகாவில் உண்மையான சக்தி இருப்பதை நம்புகிறேன். சரியான பயிற்சியுடன் யோகா செய்தால் உண்மையான பலன் கிடைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்
https://www.instagram.com/reel/CrNRluFrY1y/?utm_source=ig_web_copy_link