சிம்புவின் மாநாடு அசோக் செல்வனின் மன்மதலீலை உள்ளிட்ட படங்களைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு ,நாகசைத்தன்யா நடிப்பில், தமிழ், மற்றும் தெலுங்கில் கஸ்டடி என்ற ஆக்ஷன் படத்தை இயக்கியுள்ளார்.
இப் படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர் இப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் வரும் மே மாதம் 12ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஐபிஎல் சிறப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் வெங்கட்பிரபுவும், நாக சைத்தன்யாவும் , மேட்சை பார்ப்பதற்கு எந்த ஜெர்சி டீ சர்ட்டில் போவது என்பது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் அங்கு பிரேம்ஜி வந்து, தீர்ப்பு சொல்கிறார். இதனால் இருவரும் சமாதானமடைகின்றனர். அப்போது திடீரென வெங்கட் பிரபு , கடைசியில் என்ன இருந்தாலும் சிஎஸ்கே தான் வெற்றி பெறும் என கிண்டலடிக்க, நாக சைத்தன்யா. வெங்கட்பிரபு கழுத்தை பிடிக்க, அப்படியே முடிகிறது.
இதையடுத்து நாக சைத்தன்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த சண்டை நாளை மேட்சிலும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.