ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில்,இதன் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதையடுத்து அடுத்தாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள கமலின் 234 வது படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்கிறார்கள்.
இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயனதாரா நடிக்க வுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில்,கமல் 234 படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகளையும் பொன்னியின் செல்வன் 2 போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு நடுவே மணிரத்னம் முடித்துவிட்டாராம்..
இதையடுத்தே வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் மணிரத்னம் கமலிடம் கூறிவிட்டாராம்.
இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது கமல்-மணிரத்னம்-ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகும் இப்படத்துக்கு பின்பே கமல், ஹெச் வினோத் இயக்கத்தில் நடிப்பது குறித்து முடிவெடுப்பார் என்கிறது அவரது அலுவலக வட்டராம்