மிக் புரடக்சன் பட நிறுவனம் தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், ‘குட்டிப்புலி’ சரவண சக்தி இயக்கத்தில் , விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. விமல், தன்யா ஹோப் முதன்மை கதா பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் சரவண சக்தியின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் இன்று வெளியாக இருந்த ‘குலசாமி’. திரைப்படம் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது
இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இன்று (ஏப்ரல் 21 ஆம் தேதியில்) உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை.
எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின் வெளியீடு 21.04.23 எனும் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து, உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் வரும் 05.05.23 அன்று மாற்றப்பட்டுள்ளது. என கூறப்பட்டுள்ள்ளது. இந்நிலையில் இன்று விமல் நடிப்பில் உருவாகியுள்ள தெய்வ மச்சான் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது