விக்ரம் படம் வெளியான பிறகு கோலிவுட் பிரபுக்களின் கனவு ஆயிரம் கோடியாக இருக்கிறது.
நல்லதுதான்.!
தமிழ்த் திரைப்பட உலகத்துக்கு அது பெருமையாக இருக்கும் .
ஆயிரம் கோடி போட்டியில் ‘பொன்னியின் செல்வன் 2’ படமும் ‘லியோ ‘படமும் உடனடியான போட்டியில் இருக்கின்றன.
பொன்னியின் செல்வனுக்கு வாய்ப்பு இருப்பதாக புரமோட்டர்கள் சொல்லுகிறார்கள்..அவர்கள் சொல்லுகிற முதன்மையான கருத்து ‘லைகா ‘தயாரிப்பு நிறுவனம். உலக அளவில் அவர்களுக்கு இருக்கிற செல்வாக்கு துணை செய்யும். அடுத்து அவர்கள் சொல்லுகிற காரணம் ‘பொன்னியின் செல்வன்’முதல் பாகம் பெரிய அளவில் வசூல் செய்திருக்கிறது. ஆகவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
லியோவுக்கு வாய்ப்பு எப்படி?
“டேபிள் பிராபிட்டே இத்தனை கோடி வந்திருக்கு ..அதனால ஆயிரம் கோடி வசூல் சாத்தியம்தான்”என்கிறார்கள் சில புரமோட்டர்கள் அவர்கள் பெய்ட் புரமோட்டர்கள் .
“டேபிள் பிராஃபிட் என்பதில் முழுத் தொகையும் கிடைத்து விடுவதில்லை. முன்தொகையா எதுவும் கிடைத்து விடாது. இண்டஸ்ட்ரியில் பைத்தியக்காரத்தனமான ‘ஹைப் ‘இருந்து வருகிறது பரிதாபமாக இருக்கிறது. அல்பமா இருக்கு.ரஜினியின் ஜெயிலர் 3000 கோடி ,கமலின் இந்தியன் 2000 கோடி வசூல் பண்ணும்னு நான் கூட சொல்லுவேன்” என்கிறார் தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர் .
இவரது கருத்தும் சரிதான்.!