ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் தயாரிப்பில் , சை கௌதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!
நடிகர் அருள்நிதி தற்போது, சை கௌதமராஜ் இயக்கத்தில், ஒலிம்பியா மூவீஸின் அம்பேத் குமார் தயாரிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதாஸ்வா, ராஜா சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்திருக்க யுகபாரதி பாடல்களை எழுதுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் நாகூரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
நடிகர் கார்த்தி, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரில் இருந்து, ஆக்ஷன், காதல், குடும்ப உணர்வுகள் என படம் 100% குடும்ப பொழுதுபோக்குடன் இருக்கும் என்பதை தெளிவாக உறுதிப்படுத்துகிறது.