நடிகர் விஜய்யின் 60-வது படம் பைரவா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். இப்படத்திற்கு முதலில் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை என்ற பெயர் சூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகின.இது எம்ஜிஆர் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு விஜய் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம்நடத்த போவதாக அறிவித்தனர்.இந்நிலையில் அவசர அவசரமாக எங்க வீட்டு பிள்ளை படத்தலைப்பு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது அந்த பெயர் இந்த படத்துக்கு இல்லை என படக்குழுவினர்தெ ரிவித்தனர் . இந்நிலையில்,இந்த படத்துக்கான தலைப்பு அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 5-ந் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் தான் நடிக்கும் படத்துக்கு பைரவா என பெயர் சூட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.இந்த பெயரை முதலில் நடிகரும் இயக்குனரும்,டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தான் பதிவு செய்து வைத்திருந்தாராம். ஆனால் விஜய் படக்குழுவினர் கேட்டதும் அந்த பெயரை விட்டுக்கொடுத்துவிட்டாராம் லாரன்ஸ்.