தலைவர் 170 என தற்காலிக தலைப்பிடப்பட்ட படத்தில் நடிகர் எவர்கிரீன் சூர்யா நடிக்கிறார் என்கிற தகவல் கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
ஜெயிலர் படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிற படத்துக்கு தலைவர் 170 என தற்காலிக டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. லைகா தயாரிக்கிற இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கப்போகிறார்.
ஜெய் பீம் இயக்குநர் த.செ .ஞானவேல் இயக்கப்போகும் படம் ஒரு காவலரின் வாழ்க்கையை சுற்றி அடித்த உண்மை நிகழ்வு என்கிறார்கள். இந்த படத்தில் 15 நிமிட நேரம் காமியோ ரோலில் சூர்யா நடிக்கிறார் என்கிறார்கள்.
இதற்கு வாய்ப்பு இருக்கிறது.சிவகுமார் நடத்தி வந்த அகரம் அறக்கட்டளையில் ஞானவேலின் உழைப்பு கணிசமாக இருந்தது.இன்று வரை அந்த குடும்பத்தின் குட் புக்கில் இருக்கிறார் ஞானவேல் .2 டி படத்தயாரிப்பு நிறுவனத்துக்காக வித்தியாசமான கதைகளை இவர் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
ஞானவேல் சிறந்த பத்திரிகையாளர் .