இயக்குனர் அருண் மாதேஸ்வரன், தனுஷ் நடிப்பில், கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் சில முக்கியமானக் காட்சிகள் , தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் இருந்து செல்லும் வழியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியில், குண்டுவெடிப்பு உள்ளிட்ட காட்சிகளின் படப்பிடிப்பால் , அப்பகுதியில் புகை சூழ்ந்த நிலையில், அங்குள்ள மக்கள் அச்சமடைந்ததாகவும், மத்தலம்பாறை கிராமத்திற்கு அருகில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (கேஎம்டிஆர்) பாதுகாப்பு மண்டலத்தில், படக்குழு சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், முறைப்படி அனுமதி பெறவில்லை என்றும், மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் பறந்த நிலையில், தென்காசி மாவட்டகலெக்டர் துரை ரவிச்சந்திரன் ”கேப்டன் மில்லர்” படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படக்குழுவினர் .தற்போது முறைப்படி அனுமதி பெற்று,மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர்.இதையடுத்து தற்போது மீண்டும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது