லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது,ஆதிக் ரவிச்சதிரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி ‘ படத்தில் நடித்துவருகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவருக்கு 33ஆவது படமாகும்.
இப்படத்தில் இயக்குனர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.இப்பட த்தை தனுஷின் மேலாளராக இருந்த வினோத்குமார் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி யூடியூபில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது..செல் போன் டைம் ட்ராவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இப்படத்தில் விஷால்,எஸ்.ஜெ.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளது தெரியவருகிறது.
இப்படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள், ரெட்ரோ கால கதைக்களம் போல் தெரியும் மார்க் ஆண்டனியில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும், செல்வராகவனும், எஸ்.ஜே.சூர்யாவும் நடிப்பில் அதகளம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.