நடிகை ஜோதிகா கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பாலிவுட்டிலும் கம்பேக் கொடுக்க இருக்கிறார்.
ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடிக்கும் ஸ்ரீ என்ற படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் ‘காதல் – தி கோர்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது வெறித்தனமாக தலைகீழாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தலைகீழாக மாடிப்படியிலிருந்து இறங்குவதும், வீட்டுச் சுவற்றில் தலைகீழாக ஒருகையில் நிற்பதும்,பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் ஜோதிகா இன்னும் அதே அழகுடனும் சீரான உடல் கட்டுடன் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரின் தீவிர உடற்பயிற்சிதான்.என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு அவரை பாராட்டி வருகின்றனர் இவ்வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.