சென்னை மெரினா கடலுக்கு நடுவே ரூ.81 கோடி செலவில் ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
பேனா சின்னம் வைப்பதற்கு ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும்.கட்டுமானப் பணிகளுக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது.
கட்டுமானப் பணி நடைபெறும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
கடலோ பாதுகாப்பு மண்டல விதிகளை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது,
கட்டுமானக் கழிவுகளை கடலுக்குள் போட கூடாது,ஆமைகள் இனப்பெருக்க பகுதிகளில் கட்டுமானம் நடைபெறக்கூடாது. என்பன உள்ளிட்ட 15 நிபந்தனைகளை நிபுணர் குழு அறிவித்துள்ளது.