சில வருடங்களுக்கு முன் சன் குழும தொலைக்காட்சியில் அனைவரையும் கவரும் மென் சிரிப்போடு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவரும் தன நீண்ட நாள் தோழியுமான ஹேமா சின்ஹாவை திருமணம் செய்து கொண்டார் ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன். அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தை பிரபல இயக்குனர் பாலா நடத்தி வைத்தார். மேற்படி திருமணம் பெசன்ட் நகர் முருகன் கோவிலில் நடந்தது. மதுரையைச் சேர்ந்த ஹே மா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.இவர் வெளிநாட்டில் வசித்து வந்தது குறிப்பிடதக்கது.