இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்காக கமல்-இயக்குனர் ஷங்கர் தலைமையிலான படக்குழு, சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்றது.,அங்கு பல்லாயிரம் அடி உயரத்திலான விமான சாகசக் காட்சிகள் உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மாஸ்டர் பீஸான கிளைமாக்ஸ் பிரமாண்ட ரயில் சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டன.
மொத்தம் 12 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.இச் சண்டைக்காட்சி பற்றி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் பல ஆண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள .இந்த ரயில் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்கிறார்கள். அதனால் தான் இந்த ரயிலுக்காக படக்குழு தென்னாப்பிரிக்கா சென்று படப்பிடிப்பினை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.