இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் புதிய படத்துக்கு ‘எல்ஜிஎம்’ என தலைப்பிடபட்டுள்ளது.
ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சுவாரசியமான திரைக்கதை, செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை படமாக எல்.ஜி.எம்.உருவாகி வருகிறது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை கொண்டாடும் வகையில் படப்பிடிப்பின் இறுதி நாளன்று படகுழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில்,’எல்ஜிஎம்’ படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.