சாகுந்தலம் படத்தை தொடர்ந்து,நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ’சிட்டாடல்’ படத்தின் இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடருக்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை மிகவும் பிட்டாக வைத்திருக்கிறார்.
இந்த வெப் தொடருக்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமந்தா, தற்போது ஐஸ் பாத் எடுக்கும் புகைப்பட ஒன்றை வெளியிட்டு, ’இது மிகவும் டார்ச்சர் தரக்கூடியது’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.