இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் களமிறங்கி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
அதே சமயம் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் விரைவில் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.நடிப்பு, இயக்கம் தவிர சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக வலம்வரும் இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலி தம்பதியினர் அவ்வப்போது தங்கள் குடும்ப புகைப்படங்களை வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில்,கீதாஞ்சலி, செல்வராகவனுடன் ஸ்கை பார்க்கில் அந்தரத்தில் தொங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே இருவரும் பேசும் உரையாடல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் செல்வராகவனின் ரசிகர் ஒருவர் அவருடைய வலைதளபக்கத்தில், “மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு படத்தில் சொல்வார், இயக்குநர் ஒவ்வொரு பிரேமியிலும் செதுக்கியிருக்கிறார் என்று, அப்படி ஒரு படம் காதல் கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார் . இதில் செதுக்கியிருக்கிறார் என்று கூறுவதற்கு பதிலாக, செத்திருக்கிறார் என்று அந்த ரசிகர்கள் தன்னுடைய பதிவில் எழுத்துப்பிழை செய்துள்ளார்.
இப்பதிவை பார்த்த செல்வராகவன், ஏன் நண்பா, நான் சாகவில்லை,ஓய்வும் பெறவில்லை, எனக்காக என்னுடைய நேரத்தை கொஞ்சம் எடுத்துக் கொண்டேன், அவ்வளவுதான், நான் என்னுடைய 40களில்தான் இருக்கிறேன், மீண்டும வந்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.
View this post on Instagram