
இவர்களுடன் தங்கர் பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ‘கயல்’ தேவராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அட்டகத்தி தினேஷ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ சாங் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், தங்கர்பச்சான், வசந்த பாலன், மகிழ் திருமேனி, மீரா கதிரவன், தாமிரா நடிகர்கள் ஆரி, சிங்கம் புலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வசந்த பாலன், “ நண்பன் நா. முத்துகுமார் இறந்த பின்னர் சிரிக்க மறந்திருந்தேன் சிங்கம் புலியின் பேச்சு என்னை சிரிக்க வைத்தது. மிக மோசமான காலக்கட்டத்தில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு தலைக்காதலால் பெண்களை கொலை செய்கிறார்கள். இந்த சூழலில் இயக்குனர்கள் பொறுப்பாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்.” என்றார்