ஃபர்ஹானா விமர்சனம்.
நடிகர்கள்:ஐஸ்வர்யா ராஜேஷ்,ஜித்தன் ரமேஷ்,செல்வராகவன், கிட்டி அனுமோல்
இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்
ரேட்டிங்3/5
சென்னை ஐஸ்ஹவுஸின் கட்டுக்கோப்பான நடுத்தர இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த,பெண் ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்). மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து, ஐந்து வேளை தொழுகை உடன் கூடுதலாக ஆறாவது வேளை தொழுகை செய்து வாழும் சராசரி இஸ்லாமிய பெண்ணான பர்ஹானாவுக்கு அன்பான கணவர் கரீம் (ஜித்தன் ரமேஷ்) நடத்தி வரும் செருப்பு கடையின் வியாபாரம் கை கொடுக்காததால், குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல், மருத்துவ செலவை ஏற்க முடியாமல் திணறும் குடும்பத்துக்கு உதவ தனது கணவரின் சம்மதத்தோடு, குடும்பத்தினரை சம்மதிக்க வைத்து வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அதன்படி கால் சென்டர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த பின் ஃபர்ஹானாவின் குடும்ப பொருளாதார சூழல் சிறிது முன்னேற்றம் காண்கிறது. இதனிடையே தனது குழந்தைக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் ஃபர்ஹானாவுக்கு மேலும் பணம் தேவைப்படுவதால், மற்றொரு பிரிவுக்கு மாற்றலாகிப் போகிறார். ஆனால், அவர் தேர்ந்தடுக்கும் வேலையில் சமய சந்தர்ப்பத்தாலும், நிறுவன விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாலும் தன்னையும் அறியாமல் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து அவர் மீண்டாரா,இல்லையா என்பது தான் பரபரப்பான மீதிக்கதை.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் வரிசையில் இப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பர்ஹானா என்ற பெண்ணின் வழியாக முகமறியாதவர்களுடனான இணையவெளித் தொடர்பு உரையாடல்களில் இருக்கும் ஆபத்துகளையும், குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி மனம் விட்டு பேசுவதன் முக்கியத்துவத்தையும் மிக அழுத்தமான
படைப்பாக்கியிருக்கிறார். செல்வராகவனுடனான ஐஸ்வர்யா ராஜேஷின் உரையாடல்களை கவிதைகளாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இப்படத்தின் வசனகர்த்தா எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், பாராட்டப்பட வேண்டியவர்.
ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்திருக்கிறார். கரீமாக ஜித்தன் ரமேஷ் அற்புத நடிகன்யா இவர் .நெல்சன் வெங்கடேசன் மாதிரியான இயக்குனர்கள் அமைந்தால் இவர் பல நடிகர்களுக்கு சவால் விடும் அளவுக்கு மிளிர்வார் என்பது உறுதி.
இஸ்லாமிய மத கோட்பாடுகளில் அதிக பற்று கொண்ட இஸ்லாமிய பெரியவராக கிட்டி, இயல்பான நடிப்பால் அவரது கதாபாத்திரத்தை கூடுதல் மெருகேற்றியிருக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா எதைபற்றியும் கவலைப்படாத கால் சென்டர் பெண்ணாக நடித்திருக்கிறார், குறை சொல்லமுடியாத நடிப்பு. அதேபோல் அனுமோல் நடிப்பும்.கச்சிதம். இயக்குநர் செல்வராகவன். அவரது சைக்கோ கதாபாத்திரம் அவருக்கே உரித்தானது. மிரட்டியிருக்கிறார்.
. ஒரு உருது பேசும் இஸ்லாமிய குடும்பத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.இந்த குடும்பத்தினர் பேசும் தமிழும், உருதும் கலந்த வசனங்கள்,இப் படத்தின் மிகப்பெரிய பலம்.என்றே சொல்லலாம்.
கட்டுப்பாடான குடும்ப பின்னணியில், ஐந்துவேளை தொழுகையுடன் இறைபக்தி கொண்ட ஃபர்ஹானா கதாபாத்திரம் பணத்திற்காக தேர்ந்தெடுக்கும் தொழிலும், அந்த தொழிலில் ஆபத்துகளை அறிந்தும் அதில் தொடர்வதும், முகம் தெரியாத ஒருவரை எப்படி சந்திக்க ஒப்புக்கொள்கிறார் என்பது போன்ற காட்சி அமைப்புகள் எல்லாம் நெருடல்
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.மதம், மொழி இவைகளை தாண்டி அனைத்து பெண்களும் தங்களுடைய பொருளாதார தேவைகளுக்காக வேலைக்கு செல்வதில் தவறில்லை. என்பதையும்,
வேலைக்கு செல்லும் இடங்களில் பெண்கள் தங்கள் மீதான பாலியல் அத்துமீறல்களிருந்து தங்களை தற்காத்து கொள்வது அவர்களது கைகளிலேயே இருக்கிறது, என்பதை மிகவும் அழகாக தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் பாராட்டப்படவேண்டியவர்