சை கௌதமராஜ் இயக்கத்தில்,அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம்,கழுவேத்தி மூர்க்கன்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தில்,நாயகன் அருள்நிதிக்கு ஜோடியாக , துஷார விஜயன் நாயகியாக நடிக்க இவர்களுடன் சந்தோஷ் பிரதாப்,சாயாதேவி, யார் கண்ணன்,முனிஷ்காந்த்,ராஜசிம்மன்
பத்மன் உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தினை அம்பேத்குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்..
இப்படம் குறித்து இயக்குநர் சை கவுதமராஜ் கூறியதாவது,: “இது ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் கதை. உண்மைச் சம்பவக் கதை இல்லை என்றாலும் உண்மையாக நடக்கின்ற கதையைக் கொண்ட படம். உலகம் முழுவதும் ஒவ்வொரு விதமான மரண தண்டனை வழங்கப்பட்டு வந்திருக்கிறது. சில தென் மாவட்டங்களில் கழுவில் ஏற்றிக் கொல்லும் தண்டனையும் இருந்திருக்கிறது. அதற்காக அங்கு கழுவேற்றி மரமும் அமைக்கப்பட்டு வழக்கத்தில் இருந்திருக்கிறது.
அந்த கழுமரத்தின் பின்னணியில்தான் இந்தப் படத்தின் கதை நடக்கிறது.ஆனால் இது பீரியட் படம் இல்லை. வறட்சியான ராமநாதபுரத்தையும், அம்மாவட்ட மனிதர்களையும் அப்படியே பார்க்கலாம். நட்பு, காதல், துரோகம், இவற்றை இப்படம் பேசும்.
அருள் நிதியை சந்தித்து இப்படத்தின் கதையின் முதல் பாதியையும் அவரின் கதாபாத்திரத்தையும் சொல்லி விட்டு, அடுத்த நாள் மீதிக்கதையை சொல்வதற்காக அருள் நிதியை சந்தித்த போது , என் கதையின் நாயகனான மூர்க்க சாமியாகவே பெரிய முறுக்கு மீசையுடன் அப்படியே மாற்றியிருந்தார்.
அவரது டெடிகேஷனை கண்டு வியந்து போய்விட்டேன். அருள்நிதி இந்த கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்தி இருக்கிறார் என்கிறார்