![](https://cinemamurasam.com/wp-content/uploads/2023/05/IMG-20230518-WA0100-1-e1684417113530.jpg)
இந்நிலையில் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
நடிகர் செவ்வாழை ராசுவிற்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் எஸ்.ஆர். தமிழன் ஏற்கனவே காலமாகிவிட்டார். செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு ரசிகர்கள் திரையுலகினர் என பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கிழக்குச் சீமையிலே படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானவர் செவ்வாழை ராசு.
கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் ‘பொணந்திண்ணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற செவ்வாழை ராசு மைனா, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் ‘பொணந்திண்ணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற செவ்வாழை ராசு மைனா, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.