பத்து தல படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு,கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படம் இதுவரை இல்லாத அளவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் படமாக இந்த படம் இருக்கும் என்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும்,படப்பிடிப்புக்கு முன்பே இப்படத்தின்படத்தலைப்பு நடிகர்கள் நடிகைகள் பற்றுய அறிவிப்பும் அதை தொடர்ந்து,இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி விடும் என்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் சிம்பு, வித்தியாசமான கெட்டப்பில் போர் வீரன் கேரக்டரில் நடிப்பதாகவும் அதற்காக அவர் சில பயிற்சிகளை மேற்கொள்ள லண்டன் செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் தங்கி இருந்து சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு அதன் பிறகு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.