கருத்து சொன்னாலும் ,தகவல் சொன்னாலும் இயக்குநர் மிஷ்கின் சொன்னால் அது விவகாரமாகத்தான் இருக்கும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த மிஷ்கின் பரபரப்பான தகவலை தட்டி விட்டிருக்கிறார்.
அதாவது “ரஜினிகாந்த் சினிமாவிலிருந்து ரிட்டையர் ஆகப்போகிறார்.அவரது கடைசிப் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிற படமாக இருக்கப்போகிறது ” என சொல்லியிருக்கிறார். 50 ஆண்டு கால கலை உலக வாழ்க்கையை விட்டு விலகுகிறார் என்கிற தகவலால் ரஜினியின் ரசிகர்கள் கல கலத்துப்போய் இருக்கிறார்கள்.
மிஷ்கின் சொன்னது நிஜமானால் அது சூப்பர் ஸ்டாரின் 171 வது படமாக இருக்கும்.
“லோகேஷ் கனகராஜை அழைத்துப் பேசிய ரஜினி தனது கடைசிப்படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேசுக்கே “என சொன்னார் என்பதாக மிஷ்கின் சொன்னார்.
ஆனால் இதுவரை அந்த செய்தி மறுக்கப்படவில்லை.சூப்பர் ஸ்டாரின் தரப்பிலிருந்து அதிகார பூர்வமான தகவல் எதுவும் சொல்லப்படவில்லை.
தற்போது மொய்தீன் பாயாக மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்..ஆகஸ்ட் பிள்ளையார் சதுர்த்தி நாளன்று ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகிறது. மோகன்லால்,சிவராஜ்குமார் ,ஜாக்கி ஷெராப் ,ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார்.
அடுத்து த.செ .ஞானவேல் இயக்குகிற படத்தில் ரஜினி நடிக்கப்போகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சீயான் விக்ரம் நடிக்கிறார் என்கிறார்கள்.இதற்காக 50 கோடி ஊதியமாக பெற்றிருக்கிறாராம்.
அப்படியானால் பவர்புல் வில்லனாகத்தான் இருக்க முடியும். ஆனால் ரஜினி அடித்து விக்ரம் வீழ்கிறார் என்றால் அது லாஜிக் தானா ,மக்கள் ஏற்பார்களா ?விக்ரமின் இமேஜ் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் உயர்வான இடத்தில் இருக்கிறது.