இயக்குநர் ,நடிகர் ,இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியை கடலில் தள்ளி கடும் விளைவை ஏற்படுத்திய அந்த விபத்து , படத்தில் டைட்டிலுடன் ஓடுகிறது.
கடல் விபத்து ,அவரவர் கற்பனைக்கேற்ப மனதில் ஓடுகிறது.
சட்டென கதைக்குள் நுழைகிறோம்.
‘அகண்ட பாரதத்தின் ‘டாப் டென் பணக்காரர்களில் விஜய் குருமூர்த்தியும் ஒருவர். ஒரு லட்சம் கோடிக்கு அதிபரான விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பர் அரவிந்த். (தேவ்கில் .)இவரது கைத்தடிகள் இளங்கோ (ஜான் விஜய்.)சிவா (ஹரிஷ் பராடி.) சிவா ஒரு டாக்டரும் ஆவார்.!
இந்த முரட்டு சிந்தனையாளர் 3 பேரும் மூளை மாற்று சிகிச்சை ( சூப்பர் கற்பனை.) வழியாக விஜய் குருமூர்த்தியின் திரண்ட சொத்தை அபகரிக்க திட்டமிடுகிறார்கள்.இந்த சதியில் வந்து மாட்டுகிறார் சத்யா.(விஜய் ஆண்டனி.)
திட்டமிட்டபடி சத்யாவின் மூளை குருமூர்த்தியின் உடலில் பொருத்தப்படுகிறது. சொத்து கை மாறியதா?யார் அந்த சத்யா ?திட்டமிட்டவர்கள் என்ன ஆனார்கள்?இதுதான் பிச்சைக்காரன் 2 கதை.
நலிவடைந்தவர்களின் நிலையை சுட்டிக்காட்ட விஜய் ஆண்டனி எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது.நல்ல நோக்கத்துக்காக அதீத கற்பனையையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.கார்ப்பரேட் அலுவலகத்தில் போர்ட் மீட்டிங் ஹாலில் பிச்சைக்காரர்களை அழைத்துப்பேசுவது சாத்தியமா ?
25 ஆயிரத்துக்கு வீடு என்பது ரசிகர்களை சென்றடையுமா ,.ஷாப்பிங் மாலில் மலிவு விலை பொருட்கள் விற்பனையை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தொடங்குமா ?அது நிஜமானால் நிச்சயம் நாம் சூப்பர் இந்தியர்கள்தான்.!
சகோதர பாசம் படமாக்கியிருக்கிற விதம் அருமை. பழகிப்போனதுதான் என்றாலும் இதில் உருக்கம் அதிகம். சாந்த சொரூபியான விஜய் ஆண்டனி வெகுண்டெழும் காட்சி பலே ஆண்டனி என கூத்தாட வைக்கிறது.
படத்தில் பலவீனமாகத்தெரிகிறது விஎப் காட்சிகள்.கிராபிக்சில் பின்னி எடுக்கிற காலத்தில் இப்படியா தொய்வு தெரிவது?தலைமைச்செயலகத்தை எப்போது சென்னை கார்ப்பரேஷன் கட்டிடத்துக்கு மாற்றினார்கள்?
உயிருக்குப்போராடும் மக்களிடம் பணம் கேட்டு மருத்துவத்தை வியாபாரமாக மாற்றிவிட்டதை சாடுவது அருமை.என்னதான் சாட்டையை சுழற்றினாலும் லஞ்சம் வாங்குவது பிறப்புரிமையாகிவிட்டதே விஜய் ஆண்டனி சார் !
ஆன்ட்டி பிகிலி புதிய கண்டுபிடிப்பு.!இதனுடைய அர்த்தம் புதுசு.
நீதி மன்ற காட்சிகளில் ஆண்டனி பின்னிஎடுத்திருக்கிறார்.உணர்ச்சிகரமான காட்சிகளில் அழுத்தம் அதிகம் .இவரது இணையாக வருகிற காவ்யா தாப்பருக்கு சில காட் சிகளே என்றாலும் சிறப்பான நடிப்பு .
யோகிபாபு,தேவ்கில் ,ஹரிஷ் பெரடி ,ஜான் விஜய் ,மன்சூர் அலிகான் ஆகியோரில் மன்சூரை ரசிக்க முடிகிறது.யோகிபாபு வழக்கம்போல.!பத்திரிகையாளர் செந்தில்குமரனுக்கு நல்ல கேரக்டர்.விஜய் ஆண்டனியின் ஆஸ்தான நடிகராகி விட்டார் .
பின்னணி இசையில் விஜய் ஆண்டனி மிரட்டி விட்டார். பலத்துக்கு மிகவும் பலம்.
ஒளிப்பதிவு ஓம் நாராயண்.!
பிச்சைக்காரன் 2 ….பார்க்கலாம்.
—தேவிமணி