கடந்த 2016ல் மத்திய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகள் அனைத்தும் தற்போது மீண்டும் திரும்பப்பெற படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது. இதனால் 2000 ருபாய் நோட்டுகள் வைத்து இருப்பவர்கள் வங்கிகளில் அதை மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு ரூ. 2000 நோட்டு குவியலின் போட்டோவை வெளியிட்டு, அந்த போட்டோவை காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டில் எடுத்ததாக குறிப்பிட்டு,. அந்த 2000 நோட்டு குவியலை அவர் என்ன செய்ய போகிறார் எனவும் கேட்டிருக்கிறார்
.தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் இப்புகைப்படமும் விஷ்ணு மஞ்சுவின் கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, விஷ்ணு மன்சு தனது ட்விட்டர் பக்கத்தில், “கிஷோரை வைத்து நகைச்சுவைக்காக சொன்னதை சில ஊடகங்கள் தவறாக திரித்திருக்கின்றன.
கிஷோருக்கும் எனக்கும் எப்போதும் இதுபோன்ற வேடிக்கையான விஷயங்கள் நடக்கும் என்பது பெரும்பாலும் அனைவருக்குமே தெரியும்.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு இது நகைச்சுவை என்பது புரியும். இதை நகைச்சுவை என்று புரிந்துகொள்ளாதவர்களின் ஆன்மாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.