15 கோடி தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியான தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்த கர்நாடக அமைப்புகளுக்கு சினிமா பிஆர்ஓ யூனியன் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிஆர்ஓ யூனியன் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை” காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமையை நிலைநாட்ட அயராது பாடுபட்டு, உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தின் உரிமையைப் பெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வர் அம்மாவை அவமதிக்கும் வகையில் கர்நாடகத்தில் சில அமைப்புகள் நடத்திய இழிவான செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். 15 கோடி தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியான மாண்புமிகு முதல்வர் அம்மாவை அவமதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம்.காவிரி பிரச்சினை மட்டுமல்ல, தமிழக மக்கள் நலனுக்காக முதல்வர் அம்மா அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக சமூக வலைத் தளத்தில் கருத்துத் தெரிவித்த ஒரு இளைஞரை கொடூரமாகத் தாக்கிய கன்னட வெறியர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.