பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு தன்னைவிட 10 வயது குறைந்த பாப் பாடகரான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா சோப்ரா, கடந்த ஆண்டு தான் வாடகைத்தாய் மூலம் இந்த ரொமான்ஸ் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது.
திருமணத்துக்கு பின்னரும் பிசியாக நடித்து வரும் பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா,தற்போது ஹாலிவுட்டில் ‘சிட்டாடல்‘, ‘லவ் அகேய்ன்’ படங்களின் மூலம் உலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா. தனது ஆரம்பகால சினிமா அனுபவம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவம் குறித்து கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க வந்த புதிதில்,( அதாவது சினிமாவில் அறிமுகமான 2002-2003ம் ஆண்டுகளில்) ஒரு திரைப்படத்தில் அண்டர் கவர் ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடித்தேன்
ஒரு காட்சியில் ஒரு நபரை மயக்க வேண்டும் என்பதற்காக நான் உள்ளாடையை கழட்டுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது,அந்தக் காட்சியில் நான் உள்ளாடையை கழட்டிய போது அதை அப்படியே கேமரா முன்பு காண்பிக்க வேண்டும் என்றும், அதைப்பார்க்க தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள் என்றும் மிகவும் கொச்சையாக இயக்குநர் கூறினார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த நான், மனிதாபிமானமற்ற இயக்குனரின் அந்த செயலால்,அழுகையும் ஆத்திரமுமாக 2 நாட்கள் மட்டுமே நடித்த நிலையில், உன் படமே வேண்டாம் என தூக்கியெறிந்துவிட்டு அந்த அரங்கத்தை விட்டே கிளம்பிவிட்டேன். .என கூறியுள்ளார்.இவ்விவகாரம் தற்போது பாலிவுட் இயக்குனர்களின் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.