‘ஐபிஎல்’ இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில், கண்ணுக்கு குளிர்ச்சியாக சில கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அரபிக்குத்து’ என்ற சூப்பர் ஹிட் பாடலை அனிருத்துடன் பாடிய ஜோனிதா காந்தி சில பாடல்களை பாட உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இநிகழ்ச்சியில் ஜொனிதா காந்தி ‘அரபிக்குத்து’ உட்பட சில தமிழ் பாடல்களையும் படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.