பூ சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த’பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ். இந்தப் படம் தெலுங்கிலும் வெற்றி பெற்று வசூலை குவித்தது.பிச்சைக்காரன் படத்தை தமிழ்நாடு முழுவதும் கேஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தி என்பவரைத்தான் சத்னா திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் நடந்து சுமார் ஒரு மாதம் ஆகிவிட்டது.பிச்சைக்காரன் பட பிரமோஷன் தொடர்பாக கார்த்தி, சாட்னா டைட்டைசை அடிக்கடி சந்தித்துப் பேசிய போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருந்தாலும் அவர்களது பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருவரும் காதலித்தனர், ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பின்னர் சம்மதம் சொல்ல இப்போது பதிவு திருமணம் செய்துள்ளனர்.இதுப்பற்றி கேஆர் பிலிம்ஸ் கார்த்தி நம்மிடம் கூறியதாவது… ‛‛முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளோம். திருமணம் நடந்து ஒருமாதமாகிவிட்டது. சாட்னாவின் சுய விருப்பத்தின் பேரிலும், இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டுள்ளார் சாட்னா. இது நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு. விரைவில் ஊர் அறிய திருமணம் நடக்கும். அதன்பின்னர் சாட்னா படங்களில் நடிக்க மாட்டார், இல்லற வாழ்வை மட்டும் கவனித்து கொள்வார் என்று கூறியுள்ளார்.சாட்னாவுக்கு தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளன. திட்டம் போட்டு திருடற கூட்டம் படத்திலும் சத்னா நடிப்பதாக இருந்தது. ஆனால், கார்த்தி தரப்பில் சத்னா தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லை என்பதால் வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் அவர் திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.