பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘புராஜெக்ட் கே’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இப்படத்தில் பாலிவுட்டின் பிக் பி என அழைக்கப்படும் அமிதாப் பச்சனும், திஷா பதானியும் முக்கியவேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்தில் நடிகர் பிரபாசிற்கு வில்லனாக உலகநாயகன் கமல்ஹாசன் இணையவுள்ளதாகவும் இதற்காக அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது இப்படத்தை தயாரிக்கும் வைஜெயந்தி மூவிஸ் படநிறுவனம் விரைவில் வெளியிட உள்ள அறிவிப்பில் தெரிய வரும்